தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும், அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.