தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து 2 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் மறு உத்தரவு வரும் வரை கடைகளை திறக்க கூடாது என எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.