Categories
மாநில செய்திகள்

கோவையில் பந்த்: அவருக்கு எதுவுமே தெரியாது…. பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்பீச்….!!!!

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது குறித்து அம்மாவட்டத்தில் வருகிற திங்கட்கிழமை பா.ஜ.க சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடை விதிக்க கோரி கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவ்வழக்கில் எதிர்மனுதரராக தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை சேர்க்கப்பட்டிருந்த சூழ்நிலையில், நீதிமன்ற விசாரணையின்போது அந்த அழைப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை என்று அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அது தொடர்பாக வழக்கறிஞரும் பா.ஜ.க மாநில துணைத் தலைவருமான பால்கனகராஜ் சென்னை தி நகரிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் அவர் பேசியதாவது “கோவை பா.ஜ.க மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவித்த பந்த்துக்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. பொது நல வழங்கு நீதிமன்றத்தில் வந்தது. அவற்றில் 5வது எதிர் மனுதரராக அண்ணாமலையின் பெயர் இருந்தது. எனினும் கட்சியின் மாநில தலைவராக உள்ள அண்ணாமலை பந்த் அழைப்பு விடுத்தார் என்று பொது நல வழக்கு தொடரப்பட்டது தவறு.

இதற்கிடையில் பந்த் பற்றி தமிழக பா.ஜ.க எந்தஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. கோவை மாவட்ட பொறுப்பாளர்களும், சி.பி.ராதாகிருஷ்ணனும் அங்கு நடந்த சம்பவம் குறித்து பொதுமக்களை பந்த்க்கு அழைத்தனர். இருப்பினும் பா.ஜ.க தலைவர் பந்த் குறித்து எதுவும் கூறவில்லை. ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய இயலாது. அந்த அடிப்படையில் கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் அதை அறிவித்துள்ளார்கள்.

பந்த் சார்பில் பா.ஜ.க தலைவருக்கு எந்தஒரு தகவலும் தரவில்லை. அதே சமயத்தில் நீதிமன்றத்தில் பந்த்க்கு தடைகேட்டபோது நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை” என்று பேசினார். துணை தலைவர் இவ்வாறு கூறினாலும், எப்படி மாநில தலைவருக்கு எந்த தகவலும் தராமல் ஒரு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பந்த்துக்கு அழைப்பு விடுப்பார் என்றும், அப்படி அவர் மாநில தலைவருக்கு எத்தகவலும் கொடுக்கவில்லை எனில் தமிழக பா.ஜ.க-வின் தலைவராக அண்ணாமலை எதற்கு இருக்கிறார் என்றும் பல பேர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |