Categories
மாநில செய்திகள்

“அவங்க மனசு வைக்கணும்”…. அப்பதான் ஓபிஎஸ், இபிஎஸ் சேருவாங்க….. டிடிவி தினகரன் ஒரே போடு….!!!!

தஞ்சாவூரில் வைத்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தாய்மொழி தமிழ் என்பதால் தாய்மொழி கல்வி அவசியமான ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்தது. தமிழக மக்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி ஏற்றுக் கொள்வார்களே தவிர திணிப்பை மட்டும் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் இந்தி திணிப்பு மட்டும் தான். எனவே மத்திய அரசு இப்படிப்பட்ட விபரீதமான முயற்சிகளில் ஈடுபடாது.

தமிழ்நாட்டில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தீவிரவாதம் தலைதூக்குவதோடு, போதை பொருட்கள் நடமாட்டமும் அதிகரித்து விடுகிறது. தமிழக மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அரசு பொறுப்பேற்று அதற்கு தகுந்தார் போல் செயல்பட வேண்டும். கோவையில் நடந்த கார் வெடி விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விடும் என்றார். இதனையடுத்து அண்ணாமலை சர்ச்சையாக பேசியது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு டிடிவி தினகரன் கூறியதாவது, இப்பதான் அண்ணாமலை அரசியலுக்கு வந்திருக்கிறார். இனி போக போக நிதானமாகிடுவார். அண்ணாமலை தேசியக் கட்சியின் மாநில தலைவராக இருப்பதால் பல்வேறு விஷயங்களை சரியான முறையில் எடுத்துச் சொல்கிறார்.

அதன் பிறகு மக்கள் மனதில் இருக்கும் கேள்விகளை மட்டும் தான் செய்தியாளர்கள் கேட்பார்கள். அந்த கேள்விகளுக்கு பொறுமையாக தான் பதில் சொல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் நினைவார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதிமுக கட்சியில் இதற்கு முன்பாக யார் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ சேர்த்து வைத்தார்களோ அவர்கள் மீண்டும் மனசு வைத்தால் தான் அவர்களை சேர்த்து வைக்க முடியும். மேலும் அவர்கள் மனசு வைத்தால் கண்டிப்பாக ஓபிஎஸ்-இபிஎஸ் இணைவார்கள் என்றார்.

Categories

Tech |