தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. மேலும் இந்த தகவலை அமேசான் பிரைம் தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.
presenting the much awaited, larger than life, historical action-drama
#PS1onPrime, rent to watch now!
Coming to Prime on Nov 4#ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions@tipsofficial pic.twitter.com/Cq34q7zdD7— prime video IN (@PrimeVideoIN) October 28, 2022