Categories
தேசிய செய்திகள்

HDFC, ICICI, SBI, PNB வங்கி வாடிக்கையாளரா நீங்க….? ATM கட்டணம் எவ்வளவு….? முழு விவரம் இதோ….!!!

வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக இணையதளம் வாயிலாக பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி வருகிறது. ஏராளமான மக்கள் தங்கள் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி atm இயந்திரங்கள் வாயிலாக பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சேவைகளுக்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூல் செய்து வருகிறது. இலவச வரிவர்த்தனை வரம்பை மீறும் போது பிற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தும் போது மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியானது கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் மூன்று முறை இலவசப் பரிவர்த்தனையை அளிக்கிறது.

பிறநகரங்களில் ஐந்து முறை இலவசமாக ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுக்கும் பொழுது ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற Atm களில் எட்டு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோன்று ஹெச்டிஎஃப்சி வங்கியில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை தாண்டும்பொழுது 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி இலவச பரிவர்த்தினி வரம்பை தாண்டும் பொழுது 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதேபோல ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இல் வழங்கப்படும் இலவச பரிவர்த்தனையை தாண்டி பணம் எடுக்கு கட்டணம் 21 ஆக வசூல் செய்யப்படுகிறது.

Categories

Tech |