Categories
சினிமா தமிழ் சினிமா

“அதுக்காக உண்மையான கணவன்-மனைவி ஆகிவிட முடியுமா”…. காதல் குறித்த செய்திக்கு பிரபல நடிகை விளக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடித்துள்ள லத்தி திரைப்படம் டிசம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் ரிது வர்மா ஹீரோயினாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 45 வயதாகும் நடிகர் விஷாலுக்கு அனிஷா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், சில பிரச்சனைகளால் திருமணம் பாதியிலேயே நின்று போனது. அதன் பிறகு சமீப காலமாகவே நடிகர் விஷால் அபிநயாவை காதலித்து வருவதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. நடிகை அபிநயாவுக்கு காது கேட்காது மற்றும் வாய் பேச தெரியாது. இதனால் செய்தி சற்று தீவிரமாகவே இணையதளத்தில் பரவியது.

ஆனால் தற்போது இந்த தகவல்களுக்கு நடிகை அபிநயா விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது மார்க் ஆண்டனி படத்தில் நானும் விஷாலும் கணவன்-மனைவியாக நடித்துள்ளோம். சினிமாவில் நடித்தோம் என்பதற்காக உண்மையில் கணவன்-மனைவி ஆகிவிட முடியாது. எங்களைப் பற்றி பரவிய தகவல்கள் பொய்யானது என்று கூறியுள்ளார். மேலும் இந்த  விளக்கத்தின் மூலம் அபிநயா மற்றும் விஷால் காதல் வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது ‌

Categories

Tech |