சென்னை மாவட்டத்தில் உள்ள நெடுங்குன்றம் ஏரியில் ஏராளமான முதலைகள் இருக்கின்றன. இங்குள்ள முதலைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது. நேற்று அதிகாலை நெடுங்குன்றம் மேட்டு தெருவில் முதலை ஒன்று நுழைந்தது. சுமார் 7 அடி நீளம் உள்ள முதலையை பார்த்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனை அடுத்து வாலிபர்கள் கயிறு கட்டி முதலையை லாவகமாக பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை கொண்டு சென்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.