Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. 4-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து….!!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தம் பகுதியில் 16 பெண்கள் உட்பட 19 பேர் சரக்கு வேனில் கடந்த 22-ஆம் தேதி கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேலை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ராமன்தொட்டி என்ற பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வீரபத்திரன்(40), சின்னக்கா(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இதனை அடுத்து படுகாயமடைந்த 4 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தம்மா(50), பர்வதம்மா(28) ஆகிய இரண்டு பேரும் நேற்று உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |