தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு ரஜினி அவர்கள் கேட்டுக் கொண்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி அவர்கள் பேசியது சர்ச்சைக்குள்ளாகி அரசியல் கட்சிகள், பெரியார் இயக்க அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கிய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.