Categories
மாநில செய்திகள்

மாநில தலைமை தகவல் ஆணையர் பதவியிடம்… தெரிவு குழு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் படி தமிழகத்தில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் ராஜகோபால் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவர் மற்றும் நான்கு தகவல் ஆணையர்களின் பதவிக்கால முடிவுக்கு வந்த நிலையில் புதிதாக தகவல் ஆணையர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி தலைமையில் தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே அலாவுதீன் போன்றோர் இடம்பெற்று இருக்கின்றனர். பொது வாழ்வில் பரந்துபட்ட அறிவையும் அனுபவத்தையும் கொண்டிருக்கக் கூடியவர்கள் தகவல் ஆணையர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவு குழு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து சட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை இதழியல், வெகுஜன ஊடகம் நிர்வாகம் போன்ற பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பை செய்தவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்படுவார் என தெரிவு குழு தெரிவித்துள்ளது. இதன்படி தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 15(6)ன் படிநாடாளுமன்ற உறுப்பினரோ சட்டப்பேரவை உறுப்பினரோ தகவல் ஆணையராக பொறுப்பு வகிக்க முடியாது. ஊதியமாக வரக்கூடிய பணிகளில் இருப்போர் அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்படுவோர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் போன்றோர் விண்ணப்பித்துக் கொள்ள முடியாது. மேலும் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களுக்கான பதவிக்காலம் 3 வருடங்கள் ஆகும் 60 வயதை கடந்தவர்களாக இருந்தால் 65 வயது வரையில் பதவியை வகிக்க முடியும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரையறுக்கப்பட்ட மாதிரி பருவத்தின் மனுக்களை தயார் செய்து விரைவு தபால் அல்லது பதிவு தபால் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பிக் கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி: ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி தெருவுக்குழு தலைவர், இரண்டாவது தளம், கத்தோலிக் சென்டர் 108, அர்மொனியின் தெரு பரிமுனை சென்னை 60001.

மின்னஞ்சல் முகவரி: விண்ணப்பங்களை நவம்பர் 16ம் தேதி 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்குழு தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |