தமிழகத்தில் மனநல பிரச்சனைகளால் அவதிப்படுவோர் பயன்பெறும் விதமாக இலவச சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் 14416 என்ற இலவச எண் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளுக்கு எதுவும் தீர்வு காணலாம்.
இந்த ஆலோசனை மையம் அரசியல் பல சேவைகள் துறையுடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படும். 104 இலவச எண் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இது போன்ற சுகாதாரத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சேவை சார்ந்த இலவச எண்கள் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.