டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் 2022 டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவில் மழை காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டு 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கைவிடப்பட்டது. மெல்போர்னில் இன்று நடக்க இருந்த இரண்டு போட்டிகள் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
முன்னதாக மெல்போர்னில் நடக்க இருந்த ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தல ஒரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்பட்டன. தற்போது மழையின் காரணமாக இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
The highly-anticipated contest between Australia and England has been abandoned due to rain 🌧#T20WorldCup | #AUSvENG | 📝: https://t.co/2Gp7yag0Y7 pic.twitter.com/aInb6SH6hp
— ICC (@ICC) October 28, 2022