சிரியா, துருக்கி இடையே ஏற்பட்டுள்ள மோதலை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த சிரியா, ரஷ்யா அதிபர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில் சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சேர்ந்துகொண்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினர். இதில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள , துருக்கி நாட்டை ஒட்டி இருக்கும் இட்லிப் மாகாணதையும் மீட்க கூட்டுப்படை தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பை கண்டு அஞ்சிய சிரிய நாட்டு மக்கள் அண்டை நாடான துருக்கியை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் அதிர்ந்து போன சிரியா நாட்டில் உள்ள 12 மாகாணத்தில் கண்காணிப்பு கூண்டுகளை அமைத்து அங்கு ராணுவத்தை குவித்தது வருகின்றது. மேலும் போர்நிறுத்த விதிகளை மீறி சிரிய நாட்டின் அரசு படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதால் அண்டையிலுள்ள துருக்கி நாடுதான் பயங்கர மோதல் ஏற்பட்டு வருகின்றது.
நேற்று முன்தினம் சிரியா மேற்கொண்ட தாக்குதலில் துருக்கி நாட்டைச் சேர்ந்த 29 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் எல்லைப் பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் நடந்த தாக்குதல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் சிரியாவுடன் பேச்சவார்த்தை நடத்த அதிபர்கள் முடிவெடுத்துள்ளனர்.