Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“பாஜக பந்த்-க்கு ஆதரவு தரமாட்டோம்”…. வணிகர் சங்கம்..!!

கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பந்த்துக்கு ஆதரவு தரமாட்டோம் என வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.

கோவையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 31 ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்த்துக்கு வணிகர் சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.. இந்நிலையில்
அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் பந்த்தில் வணிகர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.

அதேசமயம் பாஜக பந்த் நடைபெறும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் உள்ள கடைகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வணிகர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது..

 

Categories

Tech |