Categories
சினிமா தமிழ் சினிமா

”வாரிசு” குறித்து பொய் சொன்ன நடிகை…. அதற்கு இப்போது கொடுத்த விளக்கம்…. என்னன்னு தெரியுமா…?.

வாரிசு பற்றி கூறிய கருத்திற்கு குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாக உள்ளது.

தளபதி விஜய் வாரிசு படத்தில் குஷ்பூ ராஷ்மிகா | Khushbu Sundar Confirms  Acting in Thalapathy Vijay Varisu Movie Rashmika Vamshi Thaman | Galatta

 

சமீபத்தில், இந்த படத்தின் சில புகைப்படங்கள் ரிலீசாகி இணையத்தில் வைரலானது. இதில் நடிகை குஷ்பூ இந்த படத்தில் நடிப்பதை உறுதியாக்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியானது. இந்நிலையில், வாரிசு குறித்து குஷ்பூ சொன்ன கருத்து தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதன்படி, இதற்கு முன்பே புகைப்படம் வெளியான போது வாரிசு படத்தில் நடிக்கிறீர்களா? என கேட்டபோது, அதற்கு ‘நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. அது சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்’ என கூறியிருந்தார். இதனையடுத்து, தற்போது உண்மை தெரிய, அதற்கு குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ‘தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரட்டும் என காத்திருந்ததாகவும், அதனால்தான் எதுவும் கூறவில்லை’ என குஷ்பு கூறியுள்ளார்.

Categories

Tech |