Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனை தூக்கி விளையாடிய தந்தை…. 1 1/2 வயது குழந்தை பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!!

தந்தை தூக்கி விளையாடிய போது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடும்பபட்டி பகுதியில் கொத்தனாரான காந்தவேல்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள்(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய ருத்ரா தேவி என்ற மகளும், 1 1/2 வயதுடைய கபிலன் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 25-ஆம் தேதி காந்தவேல் தனது மகனை தூக்கி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்த கபிலனை குடும்பத்தினர் மீது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கபிலன் பரிதாபமாக உயிரிழந்தான்m இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |