தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருக்கிறது என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் நாளை கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. அதேபோல அக்டோபர் 30ஆம் தேதி புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.