கோவை மாநகரின் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நேற்று அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கியது பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கார் ஓட்டுனர் ஒருவர் பலியாகி உள்ளது பரபரப்பை கூட்டி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி முதல் டிஜிபி வரை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த உண்மை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கன்னடம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தான் விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்தக் கட்சியின் தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதாவது, வாகனங்களில் செல்லும்போது உரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும். முடிந்தவரை தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தபால், கொரியர் மூலம் வரும் பார்சல் அனுப்பியவரிடம் தொலைபேசியில் உறுதிப்படுத்திய பிறகு பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.