Categories
தேசிய செய்திகள்

நவம்பரில் அவசர கொள்கை கூட்டம்…. எதற்காக தெரியுமா? ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. தற்போது ரேப்போ வட்டி விகிதம் 5.90% உயர்ந்துள்ளது. கடைசியாக செப்டம்பர் மாதம் இறுதியில் ரிசர்வ் வங்கி ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி ரிசர்வ் வங்கி கூடுதல் கொள்கை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். கடைசியாக செப்டம்பர் 28-30 ஆம் தேதியில் நடைபெற்றது. இதனையடுத்து டிசம்பர் 5-7 ஆம்தேதியில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நவம்பர் 3ஆம் தேதி அவசரக் கொள்கை கூட்டத்தை நடத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி பணம் வீக்கத்தை 6% கீழே கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது கட்டாயம். கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கியின் பண வீக்கம்  6% மேல் நீடித்து வருகிறது. அதனைப்போல செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7% உயர்ந்துள்ளது. எனவே பணம் வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாததற்கான காரணங்கள் குறித்து மத்திய அரசு ரிசர்வ் வங்கி பதில் அளிக்க வேண்டும். இது குறித்து நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் கொள்கை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |