கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்புகடை பகுதியில் முகமது ரபீக்(34) என்பவர் வசித்து வருகிறார் இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தில்சாத் பானு(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பானு தனது 2 பெண் குழந்தைகளையும் அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனை அடுத்து 2 வயது பெண் குழந்தையின் உடல்நிலை மோசமானதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக பானு தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததை பார்த்த டாக்டர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் பானு அடித்ததால் தான் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது உறுதியானது. நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பானுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.