Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

த்ரில் வெற்றி…. “இந்திய பீர் குடித்து கொண்டாடிய ஜிம்பாப்வே வீரர்கள்”…. வைரல் போட்டோ.!!

பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்ற பிறகு இந்திய பீரை கையில் பிடித்தபடி ரியான் பர்ல்  ட்வீட் செய்தது கவனத்தை ஈர்த்தது.

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் தூண்களாக கருதப்படும் கேப்டன் பாபர் அசாம் (4) மற்றும் முகமது ரிஸ்வான் (14) சொற்பரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அதன்பின் வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டனர். சிறப்பாக ஆடி வந்த சான் மசூத் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 15. 1 ஓவரில் 94/6 என்று பரிதவித்தது பாகிஸ்தான்.. அப்போது முகமது நவாஸ் – முகமது வசீம் இருவரும் ஜோடி சேர்ந்து  தட்டி தட்டி ரன்களைசேர்த்தனர். பின் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டபோது, ரிச்சர்ட் ங்கராவா வீசிய 19 ஆவது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தில் 3 ரன்கள் கிடைக்க இரண்டாவது பந்தை முகமது வசீம் பவுண்டரி அடித்தார். பின் மூன்றாவது பந்து ரன் ஏதும் வரவில்லை. தொடர்ந்து நான்காவது பந்தில் 1 ரன் கிடைத்தது. இறுதியில் கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது நவாஸ் தூக்கி அடித்து கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார்.  இறுதியில் ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது உள்ளே வந்த ஷாஹின் சா அப்ரிடி அடித்து விட்டு 2 ரன்கள் ஓடும்போது ரன் அவுட் ஆனார். 1 ரன் மட்டுமே கிடைத்தது..

பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.. அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகளும், பிராட் எவன்ஸ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருது பெற்றார்.. இதனால் ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது.

பாகிஸ்தானை ஒரு ரன்னில் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜிம்பாப்வே அணி வீரர்கள் மைதானத்தில் துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.. அதே சமயம் ஜிம்பாப்வே நாட்டு மக்களும் வெற்றியை ஆடி பாடி கொண்டாடி வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ரன் வெற்றியை பல ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் இந்திய பீர் குடித்து கொண்டாடினர். ஜிம்பாப்வே மிடில்-ஆர்டர் பேட்டர் ரியான் பர்ல், இந்தியாவின் பைரா நிறுவன பீருடன் தன்னையும் சக வீரர் பிராட் எவன்ஸு டன் போஸ் கொடுக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். “என்ன நடந்தது என்று நம்ப முடியவில்லை,” என்று பர்ல் எழுதினார். இந்திய பீர் பாட்டிலை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளது பாகிஸ்தானை வெறுப்பேற்றும் விதமாக அமைந்துள்ளது. ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் கடைசி பந்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |