பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்று அளவிற்கு போட்டி கடும் விறுவிறுப்பாகி உள்ளது. பிக்பாஸ்-6ல் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோலாறு, பெண் போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து வருகிறார். நட்பு என்ற போர்வையை பயன்படுத்தி பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று அவர், விளையாடுவதுபோல் க்யுன்சி மற்றும் நிவாஷினியை கடித்தார். இதைக் கண்ட ரசிகர்கள் கமல் அவரை எச்சரிக்க வேண்டும் என்று ட்விட்டரில் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.