ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்சா காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தனக்குத்தானே நிலக்கரி சுலங்கம் ஒதுக்கீடு செய்த விவகாரம் அவருடைய பதவிக்கு பிரச்சினையாக மாறியிருக்கிறது. அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு எதிர் கட்சியான பாஜக கோரிக்கை வைத்துள்ளது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு அவரது எம்எல்ஏ பதவியை பறிக்க பரிந்துரை செய்து மாநில கவர்னர் ரமேஷ் பயசுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தேர்தல் கமிஷன் அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது.
இதனை அடுத்து முதல் மந்திரி ஹேமந்த் எம்எல்ஏ பதவியை பறித்தால் முதல் மந்திரி பதவியும் போய்விடும் ஆட்சி கவிழும் நிலை உருவாகும். ஆனால் தேர்தல் கமிஷன் அறிக்கையின் பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கவர்னர் ரமேஷ் பயஸ் மௌனம் காத்து வருகின்றார். இதனால் குதிரை பேரம் நடந்து ஆட்சி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் ஹேமந்த் சோரன் இருக்கின்றார். அதனால் குழப்பநிலையை நீக்க வேண்டும் என கவர்னருக்கு ஆளும் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனாலும் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழலில் கவர்னர் ரமேஷ் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூர் சென்று இருக்கின்றார்.
அங்கு அவரிடம் ஜார்கண்ட அரசை கவிழ்க்கும் நோக்கத்தில் நீங்கள் செயல்படுவதாக ஜார்கண்ட் மந்திரிகள் குற்றம் சாட்டுகின்றார்களே என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர் இதோ பாருங்கள் அதுதான் என்நோக்கம் என்று இருந்தால் தேர்தல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் நான் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் யாரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் அல்லது பலி வாங்கும் நோக்கத்தில் எந்த நடவடிக்கையும் நான் எடுக்க விரும்பவில்லை. மேலும் நான் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகிறேன் என யாரும் என் மீது விரல் நீட்டக்கூடாது அதனால் நான் இந்த விவகாரத்தில் இரண்டாவது கருத்து கேட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் இரண்டாவது கருத்தை யாரிடம் கேட்டிருக்கிறார் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து இரண்டாவது கருத்தை பெற்ற பின் அதிரடி முடிவு எதுவும் வருமா என கேள்வி எழுப்பிய போது கவர்னர் ரமேஷ் பயஸ் டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை போடப்பட்டிருக்கிறது. ஆனால் ஜார்கண்டில் அவ்வாறு தடை இல்லை அதனால் அங்கே அணுகுண்டு வெடிக்கலாம் என பதில் அளித்துள்ளார். எனவே அவர் தேர்தல் கமிஷன் அறிக்கை இரண்டாவது கருத்தை பெற்று முதல் மந்திரி ஹேமந்த் பதவியை பறிக்கும் ஆபத்து இருப்பதாக அரசியல் நோக்கங்கள் கருதுகின்றனர் இது ஜார்கண்ட் அரசியலில் புதிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.