Categories
மாநில செய்திகள்

“இதுதான் புதிய திராவிட மாடலா…..?” Twitter இல் தெறிக்க விட்ட குஷ்பூ…. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கனிமொழி….!!!!

திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெண்கள் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ஆண்கள் பெண்களை அவமரியாதியாக பேசினால் அது அவர்கள் வளர்ந்த விதத்தையும் நச்சு சூழலையும் காட்டுகிறது. ‌ ஆண்கள் பெண்ணின் கர்ப்பப்பையை அவமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் தாங்கள் கலைஞரை பின்பற்றுவதாக கூறுகிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் நடக்கும் புதிய திராவிட மாடலா என்று பதிவிட்டுள்ளார்‌. அதோடு கனிமொழியையும் குஷ்பூ டேக் செய்து பதிவிட்டு இருந்தார்.

இதனால் தற்போது திமுக கட்சியின் துணை பொது செயலாளரும், எம்.பியுமான கனிமொழி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பெண்ணாகவும் ஒரு மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று யார் செய்தாலும் அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் இப்படிப்பட்ட பேச்சுகளை கண்டிப்பாக பொறுத்துக் கொள்ளவே முடியாது. திமுக கட்சியும் பொறுத்துக் கொள்ளாது‌. என்னுடைய தலைவர் முதல்வர் ஸ்டாலினின் காரணமாக என்னால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை நடிகர் குஷ்பு பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மிக்க நன்றி கனி. உங்களுடைய ஆதரவு மற்றும் நிலைப்பாட்டை நான் கண்டிப்பாக பாராட்டுகிறேன். நீங்கள் எப்போதுமே பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக துணை நிற்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுகள் திமுக மற்றும் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |