Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இன்று கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருப்பூர்

உடுமலை அருகே உள்ள ஆலமரத்து துணை மின் நிலையம் பெதப்பம்பட்டி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்ரப்ப நகர், லிங்கம் நாயக்கனூர், கொங்கல் நகரம், கொங்கல் நகரம் புதூர், எஸ், அம்மாபட்டி நஞ்சை கவுண்டன் புதூர், மூலனூர், விருகல்பட்டி புதூர், பழையூர், அணிகடவு, ராமச்சந்திராபுரம் மரிக்கந்தை, செங்கோட கவுண்டன் புதூர், சிந்துலுப்பு ,எல்லப்ப நாயக்கனூர் ஆலமரத்துர், இலுப் நகரம், சிக்கனூத்து ஆமந்தகடவு ஆகிய பகுதிகளில் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

நாமக்கல்

பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பளையம், தம்மகாளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழகடை, கஜேந்திரநகர், சுண்டக்காளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

கன்னியாகுமரி

குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழித்துறை கோட்டத்துக்குட்பட்ட முஞ்சிறை துணை மின்நிலையத்தில் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் முஞ்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டணம், ராமன்துறை ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நிலக்கோட்டை, நூத்துலா புரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், கே.புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலி நாயக்கன்பட்டி, சுட்டிக் காலடிப்பட்டி, அவையம்பட்டி, மணியகாரன்பட்டி, பங்களாபட்டி, சீத்தா புரம், தோப்புபட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது .

Categories

Tech |