பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் சமீபத்தில் தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றோரும் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது திடீரென அவருக்கு காலில் உலோகம் ஒன்று குத்தி ரத்தம் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் உடனடியாக அமிதாப்பச்சனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் காலில் ரத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் 2 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கும் படி மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.