ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை தினம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் புதுச்சேரியில் 2023 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பதினாறு நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பொங்கல், திருவள்ளூர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு உட்பட 16 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டில் 24 நாட்கள் போது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 16 நாட்கள் மட்டுமே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.