அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 775 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். சென்னை கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் இருக்கும் 375 பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 16 உறுப்பு கல்லூரிகளில் விரைவில் 400 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி மொத்தம் 775 பேராசிரியர் பணியிடங்கள் வெளிப்படை தன்மையுடன் நிரப்பப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Categories
அண்ணா பல்கலை. 775 பேராசிரியர்கள் நியமனம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
