சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், துறைமுகங்கள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், வழிபாட்டுத்தலங்கள்,தேசிய பூங்காக்கள் மற்றும் காடுகள் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பரபதற்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகள்,கோவில் திருவிழா மற்றும் குறும்படம் தயாரித்தல் உள்ளிட்டவற்றுக்கு முறையாக காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகுதான் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டும். சமீபகாலமாக பல பகுதிகளில் சிலர் உரிய அனுமதி இல்லாமல் ட்ரோன்கள் பறக்க விடுவதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.