தமிழகத்தில் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.அதனால் மக்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக இயக்கப்பட்ட பேருந்துகள் மூலமாக அரசுக்கு 20 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அக்டோபர் 21 முதல் 24ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 10,400 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் 5,64,000 பேர் பயணித்ததில் 9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தீபாவளி முடிந்து ஊர் திரும்ப 15,000 பேருந்துகள் இயக்கப்பட்டதன் மூலமாக 10 கோடி ரூபாய் என மொத்தம் 20 கோடிக்கு மேல் போக்குவரத்து துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது.