முதல் நாளிலிருந்தே நான் ‘மோசமான தேர்வு’ என்றேன் என்று பாகிஸ்தான் தோல்விக்குப் பிறகு பாக் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அந்நாட்டு அணி நிர்வாகத்தை சாடியுள்ளார்..
ஆஸ்திரேலியாவில் தற்போது 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் தூண்களாக கருதப்படும் கேப்டன் பாபர் அசாம் (4) மற்றும் முகமது ரிஸ்வான் (14) சொற்பரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.
அதன்பின் வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டதால் பாகிஸ்தான் நெருக்கடியில் சிக்கித் தவித்தது. சிறப்பாக ஆடி வந்த சான் மசூத் 44 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். 15. 1 ஓவரில் 94/6 என்று பரிதவித்தது பாகிஸ்தான்.. அப்போது முகமது நவாஸ் – முகமது வசீம் இருவரும் ஜோடி சேர்ந்து தட்டி தட்டி கொண்டு சென்றனர். கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டபோது, ரிச்சர்ட் ங்கராவா வீசிய 19 ஆவது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது.
இறுதியில் கடைசி இரண்டு ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட ஒரு வழியாக பாகிஸ்தான் 19ஆவது ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தில் 3 ரன்கள் கிடைக்க இரண்டாவது பந்தை முகமது வசீம் பவுண்டரி அடித்தார். பின் மூன்றாவது பந்து ரன் ஏதும் வரவில்லை. தொடர்ந்து நான்காவது பந்தில் 1 ரன் கிடைத்தது. இறுதியில் கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது நவாஸ் தூக்கி அடித்து கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார் . இறுதியில் ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது உள்ளே வந்த ஷாஹின் சா அப்ரிடி அடித்து விட்டு 2 ரன்கள் ஓடும்போது ரன் அவுட் ஆனார். 1 ரன் மட்டுமே கிடைத்தது.. பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது..
இதனால் ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஆக இந்த போட்டி அமைந்துவிட்டது. பாகிஸ்தான் அணி இப்படி தொடர்ந்து 2 போட்டிகளில் (இந்தியா, ஜிம்பாப்வே) தோல்வியடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாக். கேப்டன் பாபர் அசாம் மீதும், அணி நிர்வாகம் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஸ்டேஜ் போட்டியில் ஜிம்பாப்வே பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த சிறிது நேரத்திலேயே, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல் நாளிலிருந்தே நான் மோசமான தேர்வு என்று சொன்னேன்… இப்போது அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?” பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) கடவுள் மற்றும் தலைமை தேர்வாளர் என்று அழைக்கப்படுபவர்களை அகற்றுவதற்கான நேரம் இது என்று நினைக்கிறன்” என்று பதிவிட்டுள்ளார்.
from day one I said poor selection ub is cheez ki responsibility kon le ga I think it's time to get rid of so called chairman jo pcb ka khuda bana hwa hai and so called chief selector.
— Mohammad Amir (@iamamirofficial) October 27, 2022