தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ்பாபு. இவருடைய படங்கள் பொதுவாகவே சூப்பர் ஹிட் ஆகும். நடிகர் மகேஷ்பாபுவின் படங்கள் தெலுங்கு மட்டுமின்றி மலையாளம் மற்றும் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்படும். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சர்காரு வாரி பாட்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. நடிகர் மகேஷ்பாபு பிரபல பாலிவுட் நடிகை நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை நர்மதா பாலிவுட் மட்டுமின்றி மராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் மகேஷ் பாபு மற்றும் நர்மதா தம்பதியினருக்கு கிருஷ்ணா என்ற மகனும், இந்திரா தேவி என்ற மகளும் இருக்கின்றனர். இதனையடுத்து தற்போது நடிகர் மகேஷ்பாபுவின் மகன் மற்றும் மகள் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தந்தையை போன்று மகனும் இருப்பதாக கூறி வருகின்றனர்.