கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சையத் அப்ரார் என்பவர் தனது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் பைக்காரா செல்வதற்காக மாலை 4 மணிக்கு 9-வது மேல் அருகே சென்ற அப்போது பைக்காரவிலிருந்து ஊட்டி நோக்கி வந்த காரும், சையத் அப்ராரின் காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சையத் அப்ரார், நிஜாம்(59), ஜாகீர்(19), பாஷில்(19), பிரசன்னா(38), கிறிஸ்டோபர்(36) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த ஆறு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மலைப்பகுதியில் வாகனங்களை ஓட்டும்போது விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.