Categories
தேசிய செய்திகள்

அப்படிப் போடு…! அரசு ஊழியர்கள் இனி தாமதாக வந்தால்….. மாநில அரசு கடும் எச்சரிக்கை….!!!!

அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர். இதனைஅடுத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் புதுச்சேரி அரசு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதில் அரசு அலுவலக நேரம் தொடங்கியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் பொது சேவை சார்ந்த துறைகள் உட்பட பலவற்றிலும் அரசு ஊழியர்களின் இருக்கைகள் காலியாகவே உள்ளது. தாமதமாக பணிக்கு வருகின்றனர் என்று தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதன் அடிப்படையில் முழு துறையின் செயல் திறனை மக்கள் மதிப்பிடுகிறார்கள்.

அதனால் அரசு ஊழியர்கள் நேரத்திற்கு வருகை தரவும் அவர்களுடைய இருக்கையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசு துறைகளிலும் திடீர் ஆய்வு செய்ய வேண்டும். சரியான நேரத்தில் பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அது பற்றி மாதந்தோறும் அறிக்கை தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |