தெலங்கானா பத்தப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் ராஜசேகர் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது 15 வயது மகள் கீதா தினசரி பத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதன்படி ஒரு நாள் கீதா பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது சில இளைஞர்களிடம் பேசிக்கொண்டு வந்ததை தந்தை ராஜசேகர் பார்த்துள்ளார். அந்நாளிலிருந்து தொடர்ந்து ராஜசேகர் தன் மகளை கண்காணித்து வந்துள்ளார்.
அத்துடன் கீதாவுக்கு அறிவுரையும் கூறினார். இந்த சம்பவம் குறித்து ராஜசேகருக்கும், மகள் கீதாவுக்கும் இடையே தினசரி சண்டை ஏற்பட்டு வந்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அத்துடன் கீதா ஒருவரை காதலித்து வந்ததாக பலரால் பேசப்பட்டு வந்த நிலையில், தந்தை ராஜசேகரும் காதல் விவகாரம் இருப்பதாக சந்தேகித்துள்ளார். இதனால் ராஜசேகர் தன் மகளை கோடரியால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் தந்தை ராஜசேகரை கைது செய்துள்ளனர். அத்துடன் ராஜசேகரின் மீது ஐபிசி பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.