அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திரன் நரேன் பதவி காலத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்களை தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அவர்களின் சிலருக்கு பாலில் ஆதாயத்திற்கு பதிலாக வேலையும் வழங்கி உள்ளார். இது குறித்து 21 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர்.எஸ்.ரிஷி ஆகியோர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், வேலை தேடிய போது ஹோட்டல் உரிமையாளர் மூலம் தொழிலாளர் ஆணையர் ரிஷிக்கு அறிமுகமானேன். ரிஷி என்னை தலைமைச் செயலாளரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். எனக்கு மதுபானம் வழங்கப்பட்டது. ஆனால் நான் அதனை மறுத்துவிட்டேன்.
அதனை தொடர்ந்து அந்த இரண்டு பேரால் நான் கொடூரமாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளா.ர் அதனை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் அதனைபோல பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது குறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று மிரட்டப்பட்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நரேன் இடைநீக்கம் செய்யப்பட்டார். நவம்பர் 14ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் பெற்றார். ரிஷியும் இடைநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் அவரது பெயரில் ஜாமில் வெளிவர முடியாத வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைமைச் செயலாளரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரின் ஹார்ட் டிஸ்க் முதலில் அளிக்கப்பட்டது.
அதன் பிறகு ஜூலை மாதம் அவர் போர்ட் பிளேயரில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட நேரத்தில் அது அகற்றப்பட்டது. நரேன் உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தமான் நிக்கோபார் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதங்களில் குற்றசாட்டுகளை மறுத்துள்ளார். எஃப்ஐஆர் கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளில் ஒன்றில் தான் போர்ட் பிளேயரில் தான் இருந்ததாக கூறியுள்ளார். மேலும் புதுடெல்லியில் தான் இருந்ததை நிரூபிக்க விமான டிக்கெட்கள் மற்றும் சந்தித்தவர்கள் பட்டியலை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் தலைமைச் செயலாளரின் ஊழியர்கள் உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் அவரது வீட்டிற்கு பெண்களை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. அவர்களின் ஒருவர் பெண்களை அழைத்துச் செல்ல அறிவுறுத்திப்படுவதாகவும் உள்ளூர் உணவகத்தில் உணவை எடுத்துச் செல்லவும், தலைமைச் செயலாளர் வீட்டில் பரிமாறவும், அதன் பிறகு பெண்களை இறுக்கிவிடுமாறு அறிவிக்கப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.