Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு அழைத்த மனைவி…. பள்ளி ஆசிரியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அக்ரஹாரம் வீதியில் சீனிவாசன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விக்னேஷ்வரி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரிதம் தன்வந்திரிக்கா(8) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேலத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம் என விக்னேஷ்வரி தனது கணவரை அழைத்துள்ளார். அதற்கு விடுமுறை இல்லாததால் அங்கு போக வேண்டாம் என சீனிவாசன் கூறியதால் கணவன் மனைவிக்கு இடையே கடந்த 22-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சீனிவாசன் வீட்டில் இல்லை. அவர் வெளியே சென்றிருப்பார் என விக்னேஸ்வரி நினைத்தார்.

நீண்ட நேரமையும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் விக்னேஸ்வரி உறவினர்களுடன் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் விக்னேஸ்வரி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை தேடி வந்தனர். இந்நிலையில் பழைய கலையனூர் பகுதியில் இருக்கும் பவானி ஆற்றில் சீனிவாசன் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Categories

Tech |