ஆம்புலன்ஸில் வைத்து பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றி மலை கிராம பகுதியில் சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஸ்டெல்லா(23) என்ற மனைவி உள்ளார். நிறை மாத கர்ப்பிணியான மேரிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் மேரியை கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது மேரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கொடிவேரி நால்ரோடு அருகே வாகனத்தை நிறுத்திவிட்டார். இதனை அடுத்து மருத்துவ உதவியாளர் குமரேசன் பிரசவம் பார்த்ததில் மேரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.