வீட்டின் கதவை உடைத்து துப்பாக்கி தோட்டாக்களை திருடிய ரவுடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பாதுகாப்பு துறையில் மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர்க்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பாபு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அவருடைய கை துப்பாக்கியின் 21 தோட்டாக்கள் திருடப்பட்டு இருந்ததையும் அறிந்து கொண்டார். இதனால் அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். மேலும் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா வில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் ரமேஷ்பாபு வீட்டின் அருகே சந்தேகப்படும் படியாக ஒரு வாலிபர் நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதனை அடுத்து அந்த நபர் யார் என காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் ரமேஷ் பாபுவின் கைதுப்பாக்கில் உள்ள தோட்டாக்களை திருடியது ரவுடி அரவிந்த் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் ரவுடி அரவிந்தை கைது செய்து அவரிடமிருந்து 21 தோட்டக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.