உலக நாடுகளில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் ஏற்பட்டது. இந்த பொதுமடக்கத்தின் காரணமாக போலியோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் பல நாடுகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தற்போது அமெரிக்கா, மொசாம்பியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் பரவுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த நிபுணர்கள் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி உலகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்படுவது உலகம் முழுவதுமே பெரும் அச்சுறுத்தலாக அமையும். வைரஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லண்டன் மற்றும் நியூயார்க் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீரில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு மொசாம்பிக் மற்றும் மலாவி பகுதியிலும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 4 மாதங்கள் வரை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் தான் தற்போது போலியோ வைரஸ் பரவி வருகிறது என்று கூறியுள்ளது . மேலும் போலியோ வைரஸ் தொற்று குழந்தைகளை தான் பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.