Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கு ஊதியம் – பிசிசிஐ செம அறிவிப்பு ..!!

சமீபத்தில் மும்பையில் பிசிசியின் உடைய 91 வது பொதுக்குழு கூட்டமானது நடைபெற்று முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பிசிசிஐக்கு 6000 கோடி வருமானம் வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால், தற்போது பிசிசிஐ சார்பில் ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட கோடி ரூபாய் பிசிசிஐ யின் வங்கி கணக்கில் இருக்கிறது.

தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய ஐபிஎல் தொடர்கள் மூலமாக பிசிசிஐயினுடைய வருமானம் என்பது அதிகரித்து வருகிறது.இந்திய அளவில் உள்ளூர் போட்டிகள் நடைபெறக்கூடிய ஒவ்வொரு மாநில விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்க ஊதியமாக வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் 2023 மார்ச் மாதத்தில் மகளிர் காண ஐபிஎல் தொடர்பு இந்தியாவில் முதல் முறையாக தொடங்க இருக்கிறது. முதல் கட்டமாக 5, 6 அணிகளுடன் இந்த ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கான ஒப்புதலையும் பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே ஒரே அளவிலான சம்பளமானது வழங்க பிசிசிஐ சார்பாக ஒப்புதல் வழங்கப்பட்டு,  அதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

பாலின பாகுபாட்டை களையும்  நடவடிக்கையாக முதல் முறையாக ஒரே மாதிரி ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார். ஆண்கள் கிரிக்கெட்டுக்கு வழங்கப்படுவது போல பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட்க்கு  15 லட்சம் ரூபாயும், ஒரு நாள் போட்டிக்கு ஊதியமாக 6 லட்சம் ரூபாயும்,  20 போட்டிக்கு மூன்று லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Categories

Tech |