இந்திய ரூபாய் நோட்டில் தெய்வங்களின் படங்கள் அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்திருக்கும் ஐடியா தற்போது வைரலாக பரவி வருகிறது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்குப் பின் இன்று ஒரு முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய டெல்லி முதலமைச்சர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி பேசியுள்ளார். அதாவது இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துடன் லட்சுமி மற்றும் விநாயகர் பெருமானின் புகைப்படங்கள் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நமது ரூபாய் நோட்டுகளில் தெய்வங்களின் புகைப்படத்தை வைக்க மத்திய அரசு மற்றும் பிரதமரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் புகைப்படமும் மற்றொரு பக்கம் லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் புகைப்படம் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் நமது முழு நாட்டிற்கும் கடவுள்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என கூறியுள்ளார். இந்த நிலையில் பழைய நோட்டுக்களை மாற்ற வேண்டும் என நான் பரிந்துரைக்கவில்லை எனவும் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் போது இந்த நடைமுறையை மத்திய அரசு தொடங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு உதாரணமாக இந்தோனேசியாவை மேற்கோள்காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால் இந்தோனேசியாவின் ஒரு முஸ்லிம் நாடு அந்த நாட்டின் மக்கள் தொகையில் 85 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். அங்கு இந்து மக்களின் மக்கள் தொகை மொத்த மக்கள்தொகையில் இரண்டு சதவீதம் மட்டுமே என்றாலும் கூட அவர்களின் நாணயத்தில் விநாயகப் பெருமானின் படம் இருக்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம் என நான் நினைக்கின்றேன் இதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து தீபாவளி பூஜை செய்யும் போது தான் தனக்கு இன்பம் எண்ணம் தோன்றியதாகவும் இந்த எண்ணத்தை எதிர்க்க வேண்டாம் எனவும் கூறியவர் நாட்டின் செலப்பிற்காகவாவது இந்த கருத்தை எதிர்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.