பாஜக சார்பில் தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வினோஜ் பி.செல்வம், சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய அமித்ஷா அவர்கள் தலைமையில் ஒரு கூட்டம். அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற கூட்டம்.
அந்த கூட்டம் ஒரு பரிந்துரை செய்றாங்க. இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இந்தி மொழியில் கல்வி பயிலலாம், கன்னடம் பேசக்கூடிய மாநிலத்தில் கன்னட மொழியில கல்வி பயிலலாம், மலையாள பேசக்கூடிய மாநிலத்தில் மலையாளத்துல கல்வி பயிலலாம். அந்த வகையில் தமிழகத்தில் தமிழ் பேசக்கூடிய நம் மக்கள், நம் பிள்ளைகள் தமிழ்ல தான் கல்வி கற்க வேண்டும் என்பது அந்த குழுவின் பரிந்துரையாக அமைந்திருக்கிறது. ஆனால் அந்த பரிந்துரை வந்தவுடனே,
ஒண்ணுமே தெரியாம திராவிட முன்னேற்ற கழகம், தமிழை வைத்து பிழைப்பு நடத்தி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் ஹிந்திக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கிடையாது. தமிழ் வளர்ச்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் செய்து இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது என தெரிவித்தார்