மும்பை, மேற்கு அந்தேரியில், பாலிவுட் தயாரிப்பாளர் கமல் கிஷோர் வேறொரு பெண்ணுடன் காரில் இருப்பதை பார்த்த அவரது மனைவி, கமல் கிஷோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, காரில் ஏறி அங்கிருந்து கிளம்ப முயன்றுள்ளார் கமல். அவரது மனைவி அவரை செல்ல விடாமல் தடுக்க முயன்ற போது, உடனே கமல் மிஸ்ரா அங்கிருந்து தப்பிக்க காரை ஓட்டிச் சென்ற போது அவரது மனைவி தடுமாறி காருக்கடியில் விழுந்தார்.
அதை பொருட்படுத்தாத கமல் மிஸ்ரா மனைவியின் மீது காரை ஏற்றி சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்நிலையில் மனைவி அளித்த புகாரின் பேரில் கமல் கிஷோர் மிஸ்ரா மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.