Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட தேவாங்கு விலங்குகள்”… திருப்பி அனுப்ப நடவடிக்கை…!!!!

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அரிய வகை ஐந்து தேவாங்கு விலங்கு குட்டிகளை திருப்பி அனுப்ப இலாகா அதிகாரிகள் முடிவெடுத்துள்ளார்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இலாகா அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் போலீசார் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த ஒரு பை லேசாக அசைவது போல இருந்தது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் பையை திறந்து பார்த்தபோது ஐந்து அரிய வகை வெளிநாட்டு விலங்கு குட்டிகள் உயிருடன் இருந்தது தெரியவந்தது. பின் அவரிடம் விசாரணை செய்ததில் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் அபூர்வ விலங்குகள், இதை வளர்ப்பதற்காக எடுத்து வந்திருப்பதாக கூறினார். ஆனால் அவரிடம் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழ்கள், வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லாச் சான்றிதழ் என எதுவும் இல்லை.

இதனால் அதிகாரிகள் ஐந்து குட்டிகளையும் பறிமுதல் செய்து மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறைக்கு தகவல் கொடுத்தார்கள். இவை ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தேவாங்கு வகையை சேர்ந்த அரிய வகை விலங்குகள் ஆகும். இதை தொடர்ந்து குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Categories

Tech |