Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம்…! ரூ. 5 லட்சம் போதாது…! முட்டிபோட்டு உக்கார்ந்து இருக்காங்க…! EX அமைச்சர் அரசுக்கு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த செய்தியாளருக்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணம் அறிவித்தது போதாது. உயிரைப் பனையம் வைத்து, கொட்டும் மழையை பார்க்காமல், வெயிலை பார்க்காமல், புயலை பார்க்காமல்,  சுனாமியை பார்க்காமல், எல்லா விதத்திலும் தன்னை பனையம் வைத்து நாட்டு மக்களுக்கு செய்தி அளிக்க வேண்டும் என்ற வகையில் இரவென்றும், பகல் என்றும் பாராமல் தியாகத்தொழில்.

ஒரு பேட்டி என்றால் மக்களுக்கு போக வேண்டும் என்று கேமராமேன் நீங்க அங்க நின்னுட்டு இருப்பீங்க. ஆனால் மைக் புடிக்கிற தம்பிகள்  கீழ உக்காந்துட்டு அரை மணி நேரம் என்றால் கூட…  இந்த செய்தி போக வேண்டும் என்ற எண்ணத்தில் முட்டி போட்டுக்கொண்டு உக்கார்ந்து கொண்டு… ஒரே நோக்கம் செய்தி போகணும். அப்படி எல்லா வகையிலும் கஷ்டப்படுகின்ற ஊடக நண்பர்கள்.. அவருக்கே ஒரு பாதுகாப்பில்லை என்ற நிலையை இன்றைக்கு ஒரு மரண குழி ஆயிடுச்சு.

ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு காண்டாக்ட் கொடுக்கிறோம்னா  கவர்மெண்ட்விதியை  பாலோ பண்ணனும். அங்கு பேரிகார்ட் போடணும்,  ”அபாயம்” இங்கு மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெறுகின்றது என எழுதி இருக்கணும். எனவே ஜாக்கிரதையாக செல்லவும் என்று எழுதி வைத்து,  அங்க டிராபிக் போலீஸ் போடணும். எந்த விதமும் இல்லாமல்,  திறந்த வெளியாக இருந்தால் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |