பிரபல நாட்டில் நடைபெற்ற அழகு போட்டியின் போது இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இலங்கை நாட்டிலுள்ள வாண்டர்பில்ட்டில் நகரில் அதிக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நீயூயார்க் நகரின் முதல் மிஸ் இலங்கை அழகு போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதார பின்னடைவை தொடர்ந்து இலங்கை மருத்துவமனை ஒன்றுக்கு பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட ஸ்டேட்டன் ஐலண்ட் போட்டிக்கு 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வந்துள்ளனர்.
இதனையடுத்து இந்த போட்டியில் நியூயார்க் ஏஞ்சலியா குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார். நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின் போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.