மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி காமராஜர் பொது தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் காமேஸ்வரன்(22) என்பவர் தீபாவளி அன்று தனது நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது முத்துகிருஷ்ணனின் வீட்டின் மீது பட்டாசு விழுந்தது.
இதனை முத்துகிருஷ்ணன் தட்டி கேட்டபோது வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் காமேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.