வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டை உளிமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ ராமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நர்சரி பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தர வேண்டும் என சிவகுமார் தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.
அப்போது கடன் வாங்கி தான் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதால் புது துணி வாங்கிக் கொடுக்க மறுத்து ஸ்ரீ ராமப்பா தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிவகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சிவகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.